Last Updated:
STR 49 | சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் இது தான். பின்னர் 2 வருடங்களாக தற்போது வரை எந்த படமும் வெளியாகவில்லை. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
போஸ்டரை பொறுத்தவரை சிம்பு படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பதாக தெரிகிறது. கையில் பொறியியல் படிப்புக்கான புத்தகத்தை வைத்திருக்கிறார் சிம்பு. அந்த புத்தகத்தில் ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று இடம்பெற்றுள்ளது.
வன்முறையும் படத்தில் இருக்கும் என்பதை கத்தி உணர்த்துகிறது. மேலும் சிம்புவின் கெட்டப்பை போஸ்டரில் வெளிப்படுத்தவில்லை. அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
February 03, 2025 6:34 AM IST