Last Updated:
திபெத்தில் நிலத்துக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.
திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி வருகின்றன.
நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் ஜிசாங் பகுதியில் இன்று காலை 6:35 மணியளவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் எதிரொலியாக பிகார், டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. திபெத்தில் நிலத்துக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உண்டானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.
மொத்தம் நான்கு முறை ஜிசாங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன்படி, முதலாவதாக காலை 5:41 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகவும், இரண்டாவதாக காலை 6:35 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகவும், மூன்றாவதாக காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், நான்காவதாக காலை 7:07 மணிக்கு 4.9 ஆகவும் பதிவானது தெரியவந்தது.
இதன் விளைவாக, இப்பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, உறங்கிக்கொண்டிருந்த பலரும் உயிரிழந்த சோகம் தெரியவந்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 07, 2025 10:41 AM IST
Tibet-Nepal Earthquake | 4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!