Last Updated:

Udit Narayan | செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோதே ரசிகை ஒருவர் பாடகர் உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது, அத்தனை பேருக்கு மத்தியில் திடீரென அந்த ரசிகையின் உதட்டில் உதித் நாராயண் முத்தம் கொடுத்தார்.

News18News18
News18

பாடகர் உதித் நாராயணன் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை முத்தமிடும் வீடியோ இணையதளத்தில் காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, தனது செயலில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பொதுவாக பாடல்கள் பாடுவோருக்கு உச்சரிப்பு, எழுத்துகளின் மாத்திரை அளவு போன்றவை மிக முக்கியம் என்பார்கள். ஆனால், பாடகர் உதித் நாராயணனுக்கு அப்படி அல்ல. துக்கத்தை கூட தூக்கலாக பாடி ஹிட் அடித்துவிடுவார். காதலன் படத்தில் இடம் பெற்ற ’காதலிக்கும் பெண்ணின்’ என்ற பாடல் மூலம் தமிழில அறிமுகமானவர் உதித் நாராயணன். தனது தனித்துவமான குரலால், தமிழில் இவர் பாடிய, காதல் பிசாசே, சோனியா சோனியா, ரோமியோ ஆட்டம் போட்டால், கொக்கரக் கொக்கரக்கோ, எங்கேயோ பார்த்த மயக்கம் போன்ற பாடல்கள் ஹிட் ஆனது.

இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்ததுடன், கண்டனங்களுக்கும் உள்ளானது. இசை நிகழ்ச்சியின் போது ‘டிப் டிப் பர்ஸா பானி’ (Tip Tip Barsa Paani) என்ற இந்தி பாடலை உதித் நாராயணன் குஷியாக பாடிக் கொண்டிருந்தார். அப்போது, மேடையின் அருகே நின்றிருந்த சில பெண்கள் அவருடன் செல்ஃபி எடுத்தனர். செல்பி எடுத்துக்கொண்டிருந்தபோதே ரசிகை ஒருவர் பாடகர் உதித்திற்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது, அத்தனை பேருக்கு மத்தியில் திடீரென அந்த ரசிகையின் உதட்டில் உதித் நாராயண் முத்தம் கொடுத்தார்.

அந்த ரசிகை மட்டுமின்றி நிகழ்ச்சியின் போது பல ரசிகைகளையும் அவர் முத்தமிட்டார். இது தொடர்பான இந்த வீடியோக்கள் வெளியான நிலையில், இது ஒழுக்கமற்ற மற்றும் அநாகரிகமான செயல் என உதித் நாராயணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்துள்ள உதித் நாராயணன், இது தனது ரசிகர்களுக்கும் தனக்கும் இடையே உள்ள அன்பின் வெளிப்பாடு தான் என்றும், அவர்கள் தன்னை நேசிப்பது போல, தானும் இன்னும் அதிகமாக அவர்களை நேசிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

தூய அன்பின் ஒரு செயலில் மோசமான ஒன்றை சிலர் பார்க்க விரும்பினால் தான் அவர்களுக்காக வருத்தப்படுகிறேன் என்றும் உதித் நாராயணன் விளக்கமளித்துள்ளார். எனினும், இவரது விளக்கத்தை ஏற்காத பலரும், பொதுவெளியில் எப்படி நடந்து கொள்வது என்று கூடவா தெரியாது என தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



Source link