Last Updated:

Union Budget 2025 | மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கானது. நடுத்தர மக்களிடம் இருந்து வாங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் பட்ஜெட் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.

News18News18
News18

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கானது என்றும், நடுத்தர மக்களிடம் இருந்து வாங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் பட்ஜெட் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். 10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்டைநிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பட்ஜெட் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன.

இதற்கிடையே, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்த பேட்டியில், மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கானது என்றும், நடுத்தர மக்களிடம் இருந்து வாங்கி பணக்காரர்களுக்கு கொடுக்கும் பட்ஜெட் என்று தெரிவித்தார். மேலும், ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்களை மிடில் கிளாஸ் என்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் கூறினார். பிரைவேட் கம்பெனிகளால் பெட்ரோல், டீசலை குறைந்த விலையில் கொடுக்க முடியும் என்றால், அரசு நிறுவனங்களால் ஏன் கொடுக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் வரியை குறைத்தால் அனைத்து விதமான மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றார். மேலும், நடுத்தர மக்களிடம் இருந்து பணத்தை அடித்து பணக்காரர்களுக்கு அரசாங்கம் குடுக்கும் வகையில் பட்ஜெட் இருப்பதாக பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

மறைமுக வரியில் சீர்திருத்தம், பெட்ரோல், டீசல், போன் ஆகியவையின் விலை குறையும் என்று எதிர்பார்த்ததாக தெரிவித்த அவர், டாப் 10 சதவீதத்திற்கு மட்டுமே வேலை பார்த்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பட்ஜெட்டில் ரயில்வே, மெட்ரோ தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும், ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது நல்ல பட்ஜெட் என்றும், இது வேறு எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்றார். பழைய வருமான வரி திட்டத்திற்கு போக முடியாது என்றும், இதை நம்பி வீட்டு கடன் வாங்கியவர்கள் மற்றும் எல்ஐசி கதி என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பின் எல்ஐசி பாலிசியை யாரும் வாங்க மாட்டார்கள் என்றும் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Union Budget 2025 | “ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது நல்ல பட்ஜெட்… ஆனால் சாமானியர்களுக்கு… ” – ஆனந்த் சீனிவாசன் சொன்ன காரணம்!



Source link