Last Updated:

Virat Kohli | தனது வலிமைக்கு ஏற்றவாறு பந்துவீசி கோலி விக்கெட்டை வீழ்த்தியதாகவும், இதனால், கோலியே டிரஸ்ஸிங் ரூம்-க்கு வந்து தன்னை பாராட்டியதாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.

Virat KohliVirat Kohli
Virat Kohli

ரஞ்சி கிரிக்கெட்டில் விராட் கோலியை போல்ட் ஆக்கியது எப்படி என்று ஹிமான்ஷு சங்வான் தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். கடந்த வாரம் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அதைத்தொடர்ந்து, கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், கோலி விக்கெட்டை வீழ்த்தியது பற்றி ஹிமான்ஷு சங்வான் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அதில், போட்டி நடைபெறும் நாளன்று தாங்கள் பயணித்த பேருந்தில், விராட் கோலியின் நான்காவது-ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்து வீசினால் அவர் ஆட்டமிழந்துவிடுவார் என்று பேருந்து ஓட்டுநர் ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்தார்.

தனது வலிமைக்கு ஏற்றவாறு பந்துவீசி கோலி விக்கெட்டை வீழ்த்தியதாகவும், இதனால், கோலியே டிரஸ்ஸிங் ரூம்-க்கு வந்து தன்னை பாராட்டியதாகவும் ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.

எனினும், கோலிக்கென்று தனியான பிளான் வைத்திருக்கவில்லை என்றும் ஹிமான்ஷு கூறியுள்ளார்.

Also Read | “அவளோ புது பாய் பிரண்டோடு ஹேப்பியா இருக்கா.. தற்குறி நானோ அவளின் நினைவோடு” – யாரை விமர்சிக்கிறார் தாடி பாலாஜி?

மேலும், விராட் கோலியோடு புகைப்படம் எடுக்கச் சென்றபோது, அவரின் விக்கெட்டை வீழ்த்திய பந்தை எடுத்துச் சென்று ஆட்டோகிராஃப் வாங்கச் சென்றதாகவும், விராட் கோலி சிரித்துக் கொண்டே ”தன்னை அவுட் ஆக்கிய அதே பந்துதானே” என்று ஜாலியாக கேட்டதாகவும் ஹிமான்ஷு பகிர்ந்துள்ளார்.



Source link