சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள முத்தையன்கட்டுக்குளம் நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்த நிலையில் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, குறித்த கிராமத்தில் வசிக்கும் 72 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 129 பேர் இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பிரகாரம், வன்னி பாதுகாப்பு படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் அங்கிருந்து அப்புறப்படுத்த இராணுவ வீரர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தொடரந்து அங்கிருந்து வெளியேறிய மக்களை தற்காலிகமாக மண்ணாகண்டல் கலவன் பாடசாலையில் தங்க வைக்க இராணுவ வீரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
The post வசந்தபுரம் கிராம மக்களை மீட்ட இராணுவத்தினர் appeared first on Thinakaran.