Last Updated:
அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் வீடியோ 1.5 லட்சம் பார்வைகளை கடந்தது. அனிருத் இசையமைத்த பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு நடிகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சவதீகா’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அறிவு எழுதிய ‘சவதீகா’ பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். முன்னதாக, இப்பாடல் யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், இந்தப் பாடலின் ரீலோடட் வெர்ஷன் வீடியோவை படக்குழு இன்று (பிப்.1) வெளியிட்டுள்ளது. இந்த வெர்ஷனின் சிறப்பம்சம் என்னவென்றால் அந்தோணி தாசனும், அனிருத்தும் இணைந்து பாடி ‘வைப்’ செய்கின்றனர். 2 மணிநேரத்தில் சுமார் 1.5 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
February 01, 2025 4:58 PM IST