Last Updated:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நாளை மறுதினம் பதவியேற்றுக் கொள்கிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதி இன்று வாஷிங்டன் செல்கின்றனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் நாளை மறுதினம் பதவியேற்றுக் கொள்கிறார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதி இன்று வாஷிங்டன் செல்கின்றனர்.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் அமைச்சரவை வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் துணை அதிபரின் விருந்தில் இருவரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு முன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி கேன்டில் நைட் டின்னர் விருந்தில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து துணை அதிபர் ஜேடி வேன்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வேன்ஸ் ஆகியோரை சந்திக்கின்றனர்.
இதையும் படிக்க: ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம்.. மறுபக்கம் தாக்குதல்.. காசாவில் 72 உயிர்களை காவு வாங்கிய இஸ்ரேல்!
டிரம்ப் பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவில், இந்திய அரசு தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
January 18, 2025 11:11 AM IST
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு; விழாவில் பங்கேற்கும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி…