Last Updated:
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் சவுண்ட்பார் சீரிஸ் வரிசையில் LG S95TR மற்றும் S90TY ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சவுண்ட்பார்கள் டால்பி அட்மோஸ் ஆடியோவை அளிக்கின்றன. கூடுதலாக, இது வயர்லெஸ் ரியர் சரவுண்டட் ஸ்பீக்கர் மற்றும் 3D ஸ்பேஷியல் சவுண்ட் டெக்னாலஜி ஆகியவற்றை கொண்டுள்ளது.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தனது புதிய ஃபிளாக்ஷிப் சவுண்ட்பார் சீரிஸ் வரிசையில் LG S95TR மற்றும் S90TY ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சவுண்ட்பார்கள் டால்பி அட்மோஸ் ஆடியோவை அளிக்கின்றன. கூடுதலாக, இது வயர்லெஸ் ரியர் சரவுண்டட் ஸ்பீக்கர் மற்றும் 3D ஸ்பேஷியல் சவுண்ட் டெக்னாலஜி ஆகியவற்றை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, புதிய சவுண்ட்பார்கள் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களையும் கொண்டுள்ளன, மேலும் இதில் AI ரூம் கேலிப்ரேஷன் என்ற அம்சமும் உள்ளது.
இந்தியாவில் எல்ஜி S95TR மற்றும் S90T சவுண்ட்பார்களின் விலை: இந்தியாவில் எல்ஜி S90T இன் விலை ஆனது ரூ.69,991 ஆகவும், அதேசமயம் எல்ஜி S95TR இன் விலை ஆனது ரூ.99,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் படி, எல்ஜி S95TR சவுண்ட்பார் ஆனது தற்போது குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.84,990 விலையில் கிடைக்கிறது. இந்த இரண்டு சவுண்ட்பார்களும் ஜனவரி 25 வரை ப்ரீ ஆர்டரில் கிடைக்கிறது. அவற்றின் விற்பனையானது ஜனவரி 28 முதல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை தளங்களில் தொடங்கும்.
எல்ஜி S95TR மற்றும் S90T சவுண்ட்பார்கள் விவரக்குறிப்புகள்: இந்த சவுண்ட்பார்களின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், LG S95TR சவுண்ட்பார் 9.1.5 சேனல் சிஸ்டம்-ஐ கொண்டுள்ளது, இதன் காரணமாக இது 810W இன் பவர் அவுட்புட்டை வழங்குகிறது. அப்கிரேட்டட் ட்வீட்டர்கள் மற்றும் இன்டகிரேட்டட் பேஸ்ஸிவ் ரேடியேட்டர் மற்றும் வயர்லெஸ் ரியர் சரவுண்ட் ஸ்பீக்கர்களுடன் ஃபைவ் அப்-ஃபைரிங் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த சவுண்ட்பார் ஆனது WOWCAST தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, இது வயர்லெஸ் முறையில் எல்ஜி டிவியுடன் எளிதாக இணைக்க அனுமதிக்கிறது. எல்ஜியின் வாவ் இன்டர்ஃபேஸ் காரணமாக டிவி சவுண்ட் செட்டிங்ஸ்-ஐ எளிதாக செய்யலாம். இது தவிர WOW ஆர்கெஸ்ட்ரா தொழில்நுட்பமும் உள்ளது. இது தவிர, 3D ஸ்பேஷியல் சவுண்ட் சப்போர்ட் இதில் கிடைக்கிறது. இதன் மொத்த எடை 26.4 கிலோ ஆகும்.
மறுபுறம், LG S90T சவுண்ட்பார் இதேபோன்ற தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் அதன் லோவர் அவுட்புட் 570W ஆக உள்ளது. மேலும் இதில் 5.1.3 சேனல் செட்அப்-ஐ வழங்குகிறது. இது சென்டர் அப்-ஃபைரிங் ஸ்பீக்கரும் உள்ளது. ஆனால் இது S95TR போன்ற வயர்லெஸ் ரியர் சரவுண்ட் ஸ்பீக்கர் இதில் இல்லை.
இது புளூடூத் 5.1 இணைப்புடன் வருகிறது. இதன் மொத்த எடை 22.2 கிலோ ஆகும். இரண்டு மாடல்களும் நிறுவனத்தின் 3D ஸ்பேஷியல் சவுண்ட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன, இது 3D இன்ஜின் மூலம் சேனல் அனாலிசிஸ்-ஐ பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
January 30, 2025 7:46 PM IST