Last Updated:

இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டியிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளதுடாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது
டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

கடந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்ல புதிய வியூகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டியிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் 3 முக்கிய மாற்றங்களை கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்துள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் ப்ளேயிங் லெவனில் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதேபோன்று துருவ் ஜுரெலுக்கு பதிலாக ரிங்கு சிங்கும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சிவம் துபேவும் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி ப்ளேயிங் லெவன்-

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி

இதையும் படிங்க – “தங்கப் பதக்கம் வெல்வதே அடுத்த இலக்கு” – டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் பேட்டி!

இங்கிலாந்து அணி-

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்



Source link