புகைப்படங்களை மட்டுமே பகிரும் தளமாக இருந்த இன்ஸ்டாகிராம், தற்போது அதன் பயனர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்கியுள்ளதால், முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், உலகெங்கிலும் 2,000 மில்லியன் பயனர்களுடன் இன்ஸ்டாகிராம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் தற்போது, நேரடி மெசேஜ்களை திட்டமிடுதல் (DMs Schedule) உட்பட பல்வேறு மேம்பட்ட மற்றும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொழில் நிறுவனம் அல்லது தனிநபர் என யாராக இருந்தாலும், நீங்கள் பகிர நினைக்கும் மெசேஜ்களை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் நீங்கள் இணையத்தை அணுக முடியாத சூழல் அல்லது சரியான நேரத்தில் உங்களது மேசேஜ்களை குறிப்பிட்ட நபர்களுக்கு அனுப்ப இந்த அம்சம் வசதியாக இருக்கும்.
இன்ஸ்டாகிராமின் இந்த ஸ்கெடியூல் அம்சம், எந்த நேரமாக இருந்தாலும் முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் நேரத்தைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜ்களை ஸ்கெடியூல் செய்து கொள்ள வழி செய்கிறது. இந்த எளிய அம்சத்தை பயன்படுத்துவது குறித்த விரிவான தகவலை இங்கே பார்ப்போம்.
இந்த அம்சத்தின் மூலம் தற்போது டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடியும். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப்-கள் போன்ற மற்ற மெசேஜ்களை அனுப்ப இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது. இந்த புதிய அம்சத்தைப் பெற உங்களது இன்ஸ்டாகிராம் ஆப் அப்டேட்டுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பாக, தொழில்களை நிர்வகித்து வருபவர்கள், இந்த அம்சத்தின் மூலம் விளம்பரங்கள், அப்பாய்ன்ட்மென்ட் ரிமைண்டர்கள் மூலம், அவர்களது தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றிய அப்டேட்களை அனுப்ப இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் தனிப்பட்ட பயனர்கள், வாழ்த்துக்கள், நிகழ்ச்சிகளை நினைவூட்டுதல் உள்ளிட்டவற்றிற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
இன்ஸ்டாகிராமில் மெசேஜ்களை ஸ்கெடியூல் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராமில் நீங்கள் அனுப்ப நினைக்கும் டைரக்ட் மெசேஜ்களை ஸ்கெடியூல் செய்வது எப்படி என்பது குறித்த படிப்படியான தகவலை இங்கே பார்க்கலாம்.
- உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் ஆப்பிற்குள் நுழையுங்கள்.
- நீங்கள் மெசேஜை ஸ்கெடியூல் செய்ய விரும்பும் கணக்கில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அதில், நேரடி மெசேஜ்-க்கான இன்பாக்ஸை திறந்தால், அதன் மேல் வலது மூலையில் உள்ள மெசேஜ் ஐகானை தொட்டு உள்நுழையுங்கள்.
- பின்னர், “நியூ மெசேஜ்” ஆப்ஷனைத் தொடுவதன் மூலம் நீங்கள் அனுப்ப விரும்பும் நபரை தேர்ந்தெடுங்கள்.
- அதில், நீங்கள் அனுப்ப நினைக்கும் டெக்ஸ்ட் மெசேஜை டைப் செய்யுங்கள்.
- இதையடுத்து, அந்த மெசேஜை ஸ்கெடியூல் செய்வதற்காக, சென்ட் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
- இவ்வாறாக அழுத்திப் பிடிக்கும்போது, ஒரு ஸ்கெடியூல் மெனு திறக்கும்.
- அதில், அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர், நீங்கள் டைப் செய்த மெசேஜை அனுப்புவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- உங்களது மெசேஜ் ஸ்கெடியூல் செய்யப்பட்டதும், உங்களது மெசேஜ் பகுதியில் 1 ஸ்கெடியூல்டு மெசேஜ் என்கிற ஆப்ஷன் தோன்றும்.
இவ்வாறாக, இன்ஸ்டாகிராமில் நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜை முன்னதாகவே ஸ்கெடியூல் செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி ஹோட்டல் ரூம்களில் மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களை எப்படி கண்டுபிடிப்பது?
இன்ஸ்டாகிராமில் ஸ்கெடியூல் செய்யப்பட்ட மெசேஜ்களை நீக்குவது எப்படி?
நீங்கள் ஒரு மெசேஜை ஸ்கெடியூல் செய்திருந்தால், அதை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடிவு செய்தால், ஸ்கெடியூல்டு மெசேஜ்களை நிர்வகிக்க இன்ஸ்டாகிராம் ஒரு ஆப்ஷனை வழங்குகிறது. அது குறித்த வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
- உங்கள் நேரடி மெசேஜ்களைத் திறக்கவும்.
- ஸ்கெடியூல்டு மெசேஜ் பக்கத்திற்கு செல்லவும்.
- அதில், ஸ்கெடியூல்டு மெசேஜ்கள் இடம்பெற்றிருக்கும்.
- பின்னர், நீங்கள் நீக்க விரும்பும் மெசேஜை அழுத்திப் பிடிக்கவும்.
- அதில் நீங்கள் மாற்றம் செய்யவோ அல்லது மெசேஜை நீக்கவோ செய்யலாம்.
இதையும் படிக்க: Smart 9 HD மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள இன்ஃபினிக்ஸ் நிறுவனம்…! எப்போது விற்பனைக்கு வருகிறது?
இன்ஸ்டாகிராமின் இந்த அம்சத்தின் மூலம் தற்போது டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடியும். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப்-கள் போன்ற மற்ற மெசேஜ்களை அனுப்ப இந்த அம்சத்தை பயன்படுத்த முடியாது. இந்த புதிய அம்சத்தைப் பெற உங்களது இன்ஸ்டாகிராம் ஆப் அப்டேட்டுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
January 30, 2025 6:04 PM IST