01
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இந்த வருட தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டது. தங்கம் ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து, 7730 ரூபாயாக விற்பனையானது.