இந்தியாவில் ஐபோன் 16 மாடலின் விலை ரூ.79,900, ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலை ரூ.89,900-ஆக உள்ளது. அதே நேரம் பிரீமியம் மாடலான ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலைகள் முறையே ரூ.1,19,900 மற்றும் ரூ.1,44,900-ஆக உள்ளன. இதனிடையே இந்திய வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட்டின் டிரேட்-இன் ப்ரோகிராமிலிருந்து பயனடையலாம், இது தங்களின் பழைய டிவைஸ்களை யூஸர்கள் எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது லேட்டஸ்ட் ஐபோன்கள் மீது குறிப்பிடத்தக்க தள்ளுபடியை வழங்குகிறது.
ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 ப்ரோ மாடலுக்கான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்:
ஸ்டைலான டெசர்ட் டைட்டானியம் ஃபினிஷ் கொண்ட 128GB ஸ்டோரேஜ் ஐபோன் 16 ப்ரோ மாடல், இப்போது 5% தள்ளுபடிக்கு பிறகு ஃபிளிப்கார்ட்டில் ரூ.1,12,900 என்ற விலையில் விற்கப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட்டின் டிரேட்-இன் ப்ரோகிராமை பயன்படுத்தி விலையை கணிசமாக குறைக்கலாம். உங்களிடம் நல்ல நிலையில் ஐபோன் 14 ப்ரோ இருந்தால் எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ.41,200 வரை தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.71,700-ஆக குறையும். கூடுதலாக, SBI கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது, மொத்தத்தில் இதன் மூலம் இறுதி விலை ரூ.68,700- ஆக குறைகிறது.
ஐபோன் 16 ப்ரோ மாடலின் சிறப்பம்சங்கள்:
– ஐபோன் 16 ப்ரோ சீரிஸில் கேமரா கன்ட்ரோல் பட்டன் உள்ளது. ஐபோன் 16 ப்ரோ 6.3-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இந்த மாடல் ஸ்லிம் பெசல்ஸ் மற்றும் ஆல்வேஸ்-ஆன் 120Hz ப்ரோமோஷன் டிஸ்ப்ளே ஆப்ஷனுடன் வருகிறது. ப்ரோ சீரிஸ் பிளாக் டைட்டானியம், ஒயிட் டைட்டானியம், நேச்சுரல் டைட்டானியம் மற்றும் புதிய டெசர்ட் டைட்டானியம் ஃபினிஷ்களில் கிடைக்கிறது.
– அட்வான்ஸ்ட் A18 Pro சிப்செட் மூலம் இயக்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் 2-வது தலைமுறை 3nm டிரான்சிஸ்டர்களை கொண்டுள்ளன. மேலும் 6-core GPU-ஆனது A17 Pro உடன் ஒப்பிடும்போது 20% வேகமான செயல்திறனை வழங்குகிறது. தவிர A18 Pro அடுத்த தலைமுறை மெஷின் லேர்னிங், ஃபாஸ்டர் USB 3 ஸ்பீட் மற்றும் ProRes வீடியோ ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்கிறது.
– iPhone 16 Pro சீரிஸில் இரண்டாம் தலைமுறை குவாட்-பிக்சல் சென்சார் கொண்ட புதிய 48MP ஃப்யூஷன் கேமரா உள்ளது, இது 48MP ProRAW மற்றும் HEIF புகைப்படங்களில் ஷட்டர் லேக்கை நீக்குகிறது. கேமரா சிஸ்டமில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 48MP அல்ட்ரா-வைட் கேமரா, 12MP சென்சார் மற்றும் 120mm ஃபோகல் லென்த் கொண்ட 5x டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.
– ஐபோன் 16 ப்ரோ சீரிஸில் புதிய ஆடியோ திறன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் வீடியோ பதிவின் போது Spatial Audio கேப்ச்சர் அடங்கும். அதே நேரத்தில் “இன்-ஃபிரேம் மிக்ஸ்” கேமராவில் உள்ள நபரின் குரலைத் தனிமைப்படுத்தி, ஸ்டுடியோ போன்ற ரெக்கார்டிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
– ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலானது ஒரு ஐபோன் இதுவரை கண்டிராத மிக நீண்ட பேட்டரி ஆயுளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
January 30, 2025 7:25 PM IST