Last Updated:
12 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
விக்ரம் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் எப்போது வெளியாகும் என்பது குறித்து கவுதம் மேனன் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
துருவ நட்சத்திரம் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்துடைய வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. ஒரு கட்டத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது.
இருப்பினும், துருவ நட்சத்திரம் படத்திலிருந்து வெளியிடப்பட்ட டிரைலர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் உயர்ந்த தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் சில ரசிகர்கள் படத்தின் மேக்கிங் ஹாலிவுட் அளவுக்கு இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால், அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படாமல் இருக்கிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதற்கிடையே, 12 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த படத்துடைய வெற்றி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் மற்ற படங்களுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க – செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவா இவங்க! ஆளே மாறிட்டாங்களே!!
இந்நிலையில், துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் திரைப்படம் கோடையில் வெளியாகும் என கூறியுள்ளார். அவரது இந்த தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
January 28, 2025 9:21 PM IST