Last Updated:
19 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்த இ-ஸ்கூட்டரை சூட்கேஸ் போல் மடிக்கலாம்.
தற்போது, EV ஸ்கூட்டர்கள் மற்றும் CNG ஸ்கூட்டர்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல், குறைந்த எடை கொண்ட ஃபோல்டபில் ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது. மோட்டோ காம்பாக்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் 19 கிலோ எடை மட்டுமே கொண்டது. இந்த ஸ்கூட்டரில் 120 கிலோ எடையுள்ள நபரை ஏற்றிச் செல்ல முடியும். இந்த இ-ஸ்கூட்டரை சூட்கேஸ் போல் மடிக்கலாம்.
இந்த இ-ஸ்கூட்டர் சூட்கேஸ் போல தோற்றமளிக்கிறது மற்றும் மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து வேறுபடுகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த இ-ஸ்கூட்டர் பற்றிய தகவலை ஹோண்டா ஏற்கனவே அறிவித்திருந்தது, ஆனால் இப்போது அதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 2026 ஆம் ஆண்டில் இந்த ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ வெளியீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ காம்பாக்டோவின் மிகப்பெரிய ஈர்ப்பு அதன் மடிக்கக்கூடிய வடிவமைப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மடிக்கக்கூடிய வடிவமைப்பு ஆனது இந்த ஸ்கூட்டரை எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இ-ஸ்கூட்டரில் ஃபோல்டபில் சீட் மற்றும் ஹேண்டில் பார் உள்ளது. ஸ்கூட்டரின் நீளம் 742 மிமீ, அகலம் 94 மிமீ மற்றும் உயரம் 536 மிமீ ஆகும். இ-ஸ்கூட்டரின் வீல்பேஸ் வெறும் 742 மிமீ மற்றும் சீட் உயரம் 622 மிமீ ஆகும்.
இந்த மோட்டோ காம்பேக்டோவில் பெர்மனெண்ட் மேக்னெட் டைரக்ட் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இதில் அதிகபட்சமாக 490W பவரையும் மற்றும் 16Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இ-ஸ்கூட்டர் 19.31 கிமீ தூரம் செல்லும். மேலும், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 24.14 கி.மீ. இந்த ஸ்கூட்டர் 0.7 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த ஸ்கூட்டரை 110W சாக்கெட் மூலம் 3 மணி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
இந்த மோட்டோ காம்பேக்டோ தற்போது வெளிநாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 2026 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
January 26, 2025 7:14 PM IST