Last Updated:
சினிமாவில் நடித்து வந்தவர் முன்னாள் பிரதமரின் மகனை திருமணம் முடித்தது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னாள் பிரதமரின் மகனை நடிகை ஒருவர் திருமணம் முடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத தகவலாக இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே இப்படியொரு நிகழ்வு நடந்திருக்கிறது.
தமிழில் வெளியான இயற்கை என்ற படத்தில் நடித்த ஹீரோயினை நியாபகம் இருக்கலாம். ராதிகா என்ற அந்த நடிகை கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டவர். 2002-இல் திரைத்துறையில் அறிமுகமான அவர் தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக கன்னடத்தில் இவர் அதிக படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக ரத்தன் குமார் என்பவரை ராதிகா திருமணம் முடித்திருந்தார். 2000 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. 2002 இல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்னர் தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டு வந்த ராதிகா 2007 ஆம் ஆண்டு எச்.டி. குமாரசாமியை திருமணம் முடித்தார். இவர் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் மகன் ஆவார். இவர்களுக்கு ஷமிகா என்ற மகள் உள்ளார். 8 ஆண்டுகளாக நீடித்த இவர்களது உறவு 2015 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
ராதிகா பல படங்களில் நடித்திருந்தாலும் இயற்கை திரைப்படம் இவரது சினிமா கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. 2 ஆவதாக ராதிகா விவாகரத்து பெற்ற பின்னர் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சினிமாவில் நடித்து வந்த ராதிகா முன்னாள் பிரதமரின் மகனை திருமணம் முடித்தது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எச்.டி. குமாரசாமி கனரக மற்றும் எஃகு தொழில் துறை இணைய அமைச்சராக பொறுப்பில் உள்ளார்.
முன்னதாக இவர் கர்நாடகாவின் முதல்வராக 2006 முதல் 2007 வரையிலும், 2018 முதல் 2019 வரையிலும் பொறுப்பில் இருந்தார். 2012 ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனத்தை மகள் ஷமிகா பெயரில் தொடங்கிய ராதிகா தொடர்ந்து கன்னட படங்களை தயாரித்து வருகிறார்.
February 01, 2025 6:24 PM IST