Last Updated:
சராசரி நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, நமது கையில் பணம் இல்லாதபோது கிரெடிட் கார்டு மூலம் ஒரு நொடியில் பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டு நமக்கு தேவையான செலவுகளை மேற்கொள்ள முடியும்.
யுபிஐ பயன்படுத்தி செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் நேரடியாக செய்யப்படும் பணப் பரிமாற்றங்களைவிட யுபிஐ (UPI) மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களின் மிகப்பெரிய எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 2024 வரையிலான அறிக்கையின்படி ரூ.2.34 லட்சம் கோடி அளவில் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் டெபிட் கார்டு அல்லாமல் நம்முடைய கிரெடிட் கார்டை யுபிஐ ஐடியுடன் இணைத்து பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி பலரது மனதிலும் இன்று வரை இருந்து வருகிறது.
சராசரி நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, நமது கையில் பணம் இல்லாதபோது கிரெடிட் கார்டு மூலம் ஒரு நொடியில் பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டு நமக்கு தேவையான செலவுகளை மேற்கொள்ள முடியும். அதே சமயத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது கவனமாகவும், கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
வழக்கமாக யுபிஐ பணப் பரிமாற்றம் செய்யும்போது நமது சேமிப்புக் கணக்கில் இருந்துதான் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும். ஆனால், யுபிஐ ஐடியுடன் கிரெடிட் கார்டை இணைப்பது என்பது பலவிதங்களில் நன்மை தரக்கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், பொருட்களை வாங்கும்போது டெபிட் கார்டைவிட கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது நமக்கு சில நன்மைகள் கிடைக்கின்றன.
சேமிப்புக் கணக்கில் இருந்து ஒருவர் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும்போது, அவரது வங்கி பதிவேட்டில் ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் வழக்கமான வரவு செலவு கணக்குகளாக குறித்து வைக்கப்படுகின்றன. இதுவே யூபிஐ மூலம் இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டில் இருந்து ஒருவர் பணப்பரிமாற்றத்தை மேற்கொண்டால், கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கப்பட்ட பதிவுகள் மட்டுமே வங்கி கணக்கில் பதியப்படும். இதன் மூலம் பேங்க் ஸ்டேட்மென்ட் பக்கம் பக்கமாக வளர்ந்துகொண்டே செல்வது குறைக்கப்படுகிறது.
இதையும் படிக்க: Life insurance: லைஃப் இன்ஷூரன்ஸ் பிளானில் எது உங்களுக்கு சரியானதாக இருக்கும்…? ஒப்பீடு இதோ…!
இதைத் தவிர பெரிய தொகையிலான பணப் பரிமாற்றத்தில் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்வதும், வேறு சில பணப் பரிமாற்றங்களுக்கு டெபிட் கார்டுகளை பயன்படுத்துவதும் என விதவிதமான பணப் பரிமாற்றங்களுக்கு பதிலாக கிரெடிட் கார்டை யுபிஐ ஐடியுடன் இணைத்து அனைத்து விதமான பணப் பரிமாற்றங்களையும் ஒரே விதமான முறையில் செய்வது மிகவும் எளிமையாகவும், கணக்கு வழக்குகளை எளிமையாக வைத்துக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும்.
அதே சமயத்தில் கிரெடிட் கார்டை யுபிஐ ஐடி-யுடன் இணைப்பதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதால் கட்டுப்பாடு இல்லாமல் அதிகம் செலவு செய்யும் ஒரு மனப்பாங்கு ஏற்பட்டு வருகிறது. அதிலும், யுபிஐ-யுடன் இணைத்து அனைத்து பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, இது மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதை தவிர ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் கிரெடிட் கார்டு பணப்பரிமாற்றம் என்பது சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது முற்றிலும் உண்மை.
இதையும் படிக்க: FDக்கான வட்டி விகிதங்களில் திருத்தம்…! மூத்த குடிமக்களுக்கு 9.3% வட்டி வழங்கும் வங்கி… விவரங்கள் இங்கே!
மேலும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, வேறு சில கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் சலுகைகளை சிலர் தவற விடுகின்றனர். எனவே கிரெடிட் கார்டை யூபிஐ-யுடன் இணைப்பதால் சில தீமைகள் இருந்தாலும், அதனை கட்டுப்பாட்டுடன் பொறுப்பாக பயன்படுத்தினால் அதிக அளவிலான நன்மைகளையும் பெற முடியும் என்பதில்லை சந்தேகமில்லை.
January 30, 2025 6:35 PM IST