Last Updated:
மலையாளத்தில் அவர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரேம் ஜேக்கப் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை சுவாசிகா தனது கணவரை மீண்டும் 2-ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
லப்பர் பந்து படத்துக்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் அவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தது. மலையாளத்தில் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கோரிப்பாளையம், வைகை ஆகிய படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
கடைசியாக இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த அப்புச்சி கிராமம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு அவர் தமிழ் சினிமாவில் இடம் பெறாத நிலையில் லப்பர் பந்து திரைப்படம் அவருக்கு கம்பேக்கை கொடுத்தது. லப்பர் பந்து திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.
இந்த படத்தில் தினேஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். தினேஷுக்கு அடுத்தபடியாக சுவாசிகாவுக்கு தான் இந்த படத்தின் மூலம் பாராட்டுக்கள் குவிந்தன. அடுத்தடுத்து தமிழில் புதிய படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் அவர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது பிரேம் ஜேக்கப் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார்.
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. ஆனால் இந்து மத முறைப்படியும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் அன்று இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
January 26, 2025 9:07 PM IST