Last Updated:
Income Tax Slabs Budget | தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக பார்க்கலாம்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய அவர், “இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.
அதே நேரம் பழைய வருமான வரி விகிதத்தில் இருப்பவர்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அடுத்த வாரம் தாக்கலாகும் புதிய வருமான வரி மசோதாவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 2025 – 26 நிதி நிலை அறிக்கை தாக்கல் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
இந்நிலையில் தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக பார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:-
2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்
Delhi Cantonment,New Delhi,Delhi
February 01, 2025 1:17 PM IST