Last Updated:

நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடும் வகையிலான போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு அவர் காட்டமான பதிலளித்துள்ளார்.

News18News18
News18

நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடும் வகையிலான போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு அவர் காட்டமான பதிலளித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரகாஷ்ராஜ் புனித நீராடியதாக புகைப்படம் ஒன்று வெளியானது. இது போலி புகைப்படம் என்று பிரகாஷ்ராஜ் மறுத்துள்ளார்.

இதையும் வாசிக்க: Album | கல்யாண தேன் நிலா..  நிகிலா விமல் லேட்டஸ்ட் போட்டோஸ்!

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத வெறியர்கள், கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவதுதான். அவர்களின் புனித விழாவின் போது கூட போலி செய்திகளை பரப்புகிறார்கள். வெட்கக்கேடான செயல் இது. போலி புகைப்படத்தை பரப்பியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.



Source link