Last Updated:
Thoothukudi Night Club: தூத்துக்குடி நகரில் எந்த பக்கம் திரும்பினாலும் வீதிக்கு வீதி நைட் கிளப்களைப் பார்க்க முடியும். இங்குள்ள மக்களுக்கும் இந்த நைட் கிளப் ஃபேவரைட் ஸ்பாட் ஆக உள்ளது.
கிளப் என்ற வார்த்தையை நாம் அன்றாட வாழ்வில் பல முறை கேட்டதுண்டு. ஸ்போர்ட்ஸ் கிளப், சயின்ஸ் கிளப் என பல வகையான கிளப்பில் நைட் கிளப் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஓர் ஊரில் வீதிக்கு வீதி ஐந்தாறு நைட் கிளப்பை பார்த்ததுண்டா? அல்லது அவ்வாறு கேள்விப்பட்டதுண்டா?
ஆம், அதுவே தூத்துக்குடி மாவட்டமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வீதிக்கு வீதி ஐந்தாறு நைட் கிளப்பை பார்க்கலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் 50 ரூபாயில் இரவு சாப்பாடே முடித்து விடலாம். நைட் கிளப்பில் சாப்பாடா!! என்று குழம்ப வேண்டாம். இங்கு தூத்துக்குடியில் காணப்படும் பெரும்பாலான புரோட்டா கடைகளில் ஹோட்டல் என்று குறிப்பிடாமல் நைட் கிளப் என்று தான் குறிப்பிடுவார்கள்.
புரோட்டா கடைகளை நைட் கிளப் என்று குறிப்பிடுவதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், “அதாவது அந்த காலத்தில் புரோட்டா கடைகளை இரவு நேரங்களில் மட்டுமே செயல்படும்.
இதையும் படிங்க: Instrument of Unity: மொழிக்கு முன்னர் தோன்றிய இசை… ஆதி பறையை அள்ளிக் கொண்டாடும் இளம் தலைமுறையினர்…
மாலை 6 மணிக்கு திறக்கப்படும் புரோட்டா கடைகள் நள்ளிரவு மூன்று மணி வரை செயல்படும். அதனால் தான் புரோட்டா கடைகளை நைட் கிளப் என்று அழைத்தனர். காலப்போக்கில் அதுவே புரோட்டா கடைகளின் அடையாளமாக மாறிவிட்டது. தற்போது பகலிலே புரோட்டா கிடைத்தாலும் நைட் கிளப் என்ற பெயர் மட்டும் பின் தொடர்கிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
February 01, 2025 12:55 PM IST
Thoothukudi Night Club: ஊர்ல எங்க பாத்தாலும் நைட் கிளப் தான்… சிறியவர் முதல் பெரியவர் வரை இதான் ஃபேவரைட்…