Last Updated:
Union Budget 2025 | நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனால் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர் வருமான வரி கட்ட அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி வரம்பு இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த விதமான வரியும் செலுத்த வேண்டியிருக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 5 சதவிகித வரி செலுத்த வேண்டும். ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 10 சதவிகித வரி செலுத்த வேண்டும். ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 15 சதவிகித வரி செலுத்த வேண்டும். அதேபோல், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 20 சதவிகித வரி செலுத்த வேண்டும். மேலும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 25 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
February 01, 2025 12:34 PM IST
Union Budget 2025 | ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.. பட்ஜெட்டில் வெளியான குட் நியூஸ்!