Last Updated:

Union Budget 2025 | நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

News18News18
News18

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார். இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாக கொண்ட பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் 2025 -முக்கிய அம்சங்கள்…

  • விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
  • தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மக்கள் வாழக்கூடிய இடங்களிலேயே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
  • சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும்.
  • சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்வு.
  • உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை.
  • 5 லட்சம் எஸ்.சி., எஸ்.டி., பெண் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும்
  • பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம்.
  • மக்கானா ( தாமரை விதைகள்) உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்.
  • அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.
  • பருப்பு உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
  • 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும்.
  • உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ.1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
  • ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு.

Also Read: Union Budget 2025 | ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.. பட்ஜெட்டில் வெளியான குட் நியூஸ்!

  • பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி.
  • AI தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
  • அணு உலைகள் மூலம் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு.
  • 52 சுற்றுலாத் தளங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
  • அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்.
  • 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
  • Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இதன்மூலம் ஒரு கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்.
  • ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை.
  • சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிப்பு.
  • புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்,
  • புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்.
தமிழ் செய்திகள்/வணிகம்/

Union Budget 2025 | வருமான வரி விலக்கு முதல் விவசாயம் வரை.. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்!



Source link