Last Updated:
Union Budget 2025: வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாதாரமன் இன்று தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட் 2025 -2026ஐ தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். அப்போது தெலுங்கு கவிதையுடன் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தொடங்கினார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், “”நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது” என்றார்.
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது.
இதையும் படிங்க : 2025 – 26 நிதி நிலை அறிக்கை தாக்கல் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. எனவே வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
மேலும் தனம், தானிய கிஷான் திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
February 01, 2025 11:36 AM IST