Last Updated:
Union Budget 2025 | அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கல்வி, மருத்துவத்திற்கான அறிவிப்புகள்
கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் 100% மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எனவும், 23 ஐஐடிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மருந்துகளுக்கு வரி விலக்கு
36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதேனும் ஒன்று மட்டும் வசூலிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
February 01, 2025 12:23 PM IST
Union Budget 2025 | 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு.. பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!