Last Updated:
நடிகர் விஜய் சேதுபதி, பான் கார்டு விண்ணப்ப இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, வரி செலுத்துவோருக்கு அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பான் கார்டு விண்ணப்பிக்கும் மத்திய அரசின் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில், வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோருக்கான சிறப்பு மையம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, வருமான வரி தொடர்பான இணையதளங்கள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் கூறுகையில், “நான் படித்து முடித்து சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆடிட்டரிடம் வேலை பார்த்திருக்கிறேன். அரசு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்வது சிரமமாக இருக்கும். பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை எளிதாக கார்ட்டூன் வடிவில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.
நான் பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டுமானால், அது ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் உள்ளது. அது தமிழில் இருந்தால் மக்களுக்கு இன்னும் எளிமையாக சென்று சேரும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முறையாக வருமான வரி செலுத்துவோர், ஒரு கட்டத்தில் வருமானம் இன்றி தவித்தால், அவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வருமான வரி செலுத்துவது அனைவரின் கடமை என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
January 30, 2025 6:40 AM IST