Last Updated:

நாளை கடைசிநாள் ஆட்டம் மட்டுமே மீதம் உள்ளதால் பிரிஸ்பேன் டெஸ்ட்டி டிராவில் முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

News18

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் 4 ஆம் நாம் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளதால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிராவஸ் ஹெட் மற்றும் ஸ்மித் ஆகியோர் சதம் அடித்து ஸ்கோர் உயர உதவினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், சுப்மன் கில் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த கோலி 3 ரன்னிலும், ரிஷப் பந்த் 9 ரன்னிலும் வெளியேறினர்.

கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கே.எல்.ராகுல். – ரவிந்திர  ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது.

இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி 16 ரன்னிலும், சிராஜ் 1 ரன்னிலும் வெளியேறினர். 63 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 201 ரன்கள் எடுத்திருந்தது.

ரவிந்திர ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழக்க 66 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின்னர் கடைசி விக்கெட்டிற்கு இணைந்த பும்ரா – ஆகாஷ் தீப் இணை சிறப்பாக ரன்களை சேர்த்தது. ஸ்கோர் 242 ரன்கள் இருந்தபோது இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது. இதற்கு பும்ரா மற்றும் ஆகாஷ் தீப்பின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பே காரணம்.

இதையும் படிங்க – ‘இளம் திறமையாளர்களுக்கு மும்பை அணி முக்கியத்துவம் அளிக்கிறது’ – WPL ஏலம் குறித்து நீடா அம்பானி பேச்சு

இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்திருப்பதால் இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை கடைசிநாள் ஆட்டம் மட்டுமே மீதம் உள்ளதால் பிரிஸ்பேன் டெஸ்ட்டி டிராவில் முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்



Source link