கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகமான நிலையில், கடந்த வருடம் அறிமுகமான ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களுக்கு கணிசமான தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐபோன் 15 சீரிஸில் உள்ள மொபைலான iPhone 15 Pro தற்போது பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான ஃபிளிப்கார்ட்டில் அதிரடி சலுகை விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த மொபைல் ரூ.1,34,900-க்கு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சுமார் ரூ.1 லட்சம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்திய பிறகு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் விற்பனையை நிறுத்திவிட்டது. ஆனாலும் ஃபிளிப்கார்ட் போன்ற பிற தேர்ட்-பார்ட்டி பிளாட்ஃபார்ம்கள் இன்னும் இந்த டிவைஸை விற்பனை செய்து வருகின்றன.
iPhone 15 Pro தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.1,03,999 என்ற விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விலையை அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்கள் iPhone 15 Pro மீது சுமார் ரூ.30,901 தள்ளுபடி பெறுகிறார்கள். இருப்பினும், இந்த சலுகை நேச்சுரல் டைட்டானியம் மற்றும் ஒயிட் டைட்டானியம் கலர் ஆப்ஷன்கள் கொண்ட மாடல்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இது தவிர எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,500 கூடுதல் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோவின் விலை ரூ.1,01,499-ஆக குறையும். இன்னும் இது மிகவும் பிரபலமாக மற்றும் விரும்பப்படும் ஃபோனாக இருப்பதால் இது ஒரு சிறந்த டீல் ஆகும்.
நீங்கள் ஐபோன் 15 பிளஸ் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. iPhone 15 Plus-ன் ஒரிஜினல் விலை ரூ.89,900-ஆக உள்ள நிலையில், தற்போது Flipkart-ல் ரூ.64,999 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு எந்தவித விதிமுறைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் ரூ.24,901 ஃபிளாட் தள்ளுபடி சலுகையை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது.
இதையும் படிக்க:
Jio Diwali offer | ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி டபுள் ஜாக்பாட்! – வெளியான அதிரடி அறிவிப்பு
ஒருவேளை நீங்கள் அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள ஐபோன் 17 சீரிஸில் இடம்பெறும் பிளஸ் மாடலை வாங்க இப்போதே திட்டமிட்டிருந்தால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகத்தின்போது பிளஸ் வேரியன்ட்டை நிறுத்திவிட்டு புதிய ஏர் மாடலை அறிமுகப்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதை கருத்தில் கொள்ளுங்கள். இந்த தகவல் உண்மையாக இருந்தால் அடுத்த ஆண்டு பிளஸ் வெர்ஷனை பார்க்க முடியாது. உங்களுக்கு பட்ஜெட் இருந்தால், உங்களுக்கு நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு பெரிய போன் தேவை என்றால் ஐபோன் 15 பிளஸ் மாடலுக்கு பதில், சமீபத்தில் அறிமுகமான ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்குவது குறித்தும் நீங்கள் பரிசீலிக்கலாம்.
இதையும் படிக்க:
TRAI New Rule: நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது? ஜியோ, ஏர்டெல், வி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..
ஸ்டாண்டர்ட் ஐபோன் 15 மாடலும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலை ரூ.69,900 என்ற ஒரிஜினல் விலைக்கு பதிலாக தற்போது ரூ.55,999 என்ற சலுகை விலைக்கு வாங்கலாம். அதாவது ஃபிளிப்கார்ட் ரூ.13,901 தள்ளுபடியை இதற்கு வழங்கியுள்ளது.
.