– நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த (‘FENGAL’ [pronounced as FEINJAL]) ஃபெஞ்சல் எனும் புயலானது, நேற்று (30) இரவு 11.30 மணியளவில் வட தமிழ்நாடு – புதுச்சேரி கரை ஊடாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது மெதுவாக மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த தொகுதி காரணமாக இலங்கையின் வானிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் மேலும் குறைவடைந்து வருகின்றது.

இன்றையதினம் (30) நாட்டின் வட மாகாணத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய, தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கி.மீ.வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

WW2024120101E

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
X 👉 x.com/ThinakaranLK
Telegram 👉 t.me/ThinakaranLK

The post ஃபெஞ்சல்: இந்தியாவிற்குள் நுழைந்தது; சுமுகமடையும் இலங்கை வானிலை appeared first on Thinakaran.





Source link