சபாநாயகராக பதவி வகித்த அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவான அவர், முனைவர் பட்டத்தை பெற்றுள்ளதாக தனது பெயருக்கு முன்னால் டொக்டர் (Dr) என குறிப்பிட்ட நிலையில் அதனை நிரூபிக்க அவர் தவறியதன் காரணமாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள், பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வந்த நிலையில், சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல தற்போது இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்றையதினம் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவதற்காக கெயெழுத்து பெறும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யார் எப்பதவியில் இருந்தாலும் தவறு செய்தால் உரிய நடவடிக்கை

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 www.instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK

சபாநாயகருக்கு எதிராக ஐ.ம.ச. நம்பிக்கையில்லா பிரேரணை!

The post அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் appeared first on Thinakaran.





Source link