விடாமுயற்சி டீசர் கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. இந்த படம் லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகிறது. டீசர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக இன்னனும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அஜித் படம் வருவதால் ரசிகர்களிடம் மட்டுமன்றி பொது மக்களுக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

கடவுளே அஜித்தே என திரையரங்குகள், மால்கள் என அவருடைய ரசிகர்கள் கூச்சலிடுவதை பொது மக்களும் ரசிக்கத்தான் செய்கின்றனர். அப்படிபட்ட ரசிகர்களுக்காகவே அனிருத் ட்ரீட் கொடுக்கும் விதமாக பிஜிஎம்மில் பின்னி எடுத்திருக்கிறார். இறுதியில் கடவுளே அஜித்தே என முதன் முதலில் வைரலான வீடியோ பதிவில் இருக்கும் இசையை சற்று மாற்றி அனிருத் விடாமுயற்சி டீசர் இறுதியில் ’முயற்சி’ என்று அதே டோனில் கத்துவதுபோல் வைத்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

இந்நிலையில் அனிருத் விடாமுயற்சி டீசருக்கு பிஜிஎம் போட்ட தருணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் டீசர் பிஜிஎம்மில் வரும் வயலின் போர்ஷனை ஒருவர் வாசிக்கிறார். அதற்கு அனிருத் வைப் செய்தபடி ரசிக்கிறார். இதன்மூலம் அவர் அஜித்திற்காக எவ்வளவு உற்சாகத்தோடு வேலை செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமன்றி ரசிகர்களை காட்டிலும் அந்த பிஜிஎம்மிற்கு முதல் ரசிகனாக வைப் செய்தது அனிருத்தான் என்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

.

  • First Published :





Source link