Last Updated:

துபாயில் பல ஆண்டுகளாக கார் ரேஸ் நடைபெற்று வந்தாலும், அஜித் பங்கேற்பதின் காரணமாக இந்த போட்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் மட்டும் இது தொடர்பாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

News18

துபாயில் நடைபெற்ற 23 4 மணி நேர கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அஜித்தை நடிகர் மாதவன் நேரில் சென்று வாழ்த்தி உள்ளார். இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவுக்கு அடுத்தபடியாக கார் ரேஸில் மிகப்பெரும் ஆர்வம் உள்ளது. இதற்காக அவர் ஏராளமான பயிற்சிகளை எடுத்ததுடன் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என்ற 2 படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அஜித் குமார் தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயப் போட்டியில் பங்கேற்று வருகிறார். இதில் அவருக்கு சொந்தமாக ஒரு அணி போட்டியில் பங்கேற்றுள்ளது. அவரும் கார் டிரைவராக ஒரு அணியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அவருடைய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடைசி நேரத்தில் அவர் ரேசில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக பயிற்சியின்போது அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் ரேசிங் சர்க்யூட்டில் வலம் வந்த அஜித் குமார் தனது அணியை உற்சாகப்படுத்தினார்.

துபாயில் பல ஆண்டுகளாக கார் ரேஸ் நடைபெற்று வந்தாலும், அஜித் பங்கேற்பதின் காரணமாக இந்த போட்டி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. எக்ஸ் தளத்தில் மட்டும் இது தொடர்பாக சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் மாதவன் அஜித் குமாரை நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அஜித் குமாருடைய அணி கார் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்ததை தொடர்ந்து மாதவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 901 என்ற எண்ணை கொண்ட அஜித் குமார் ரேசிங் (Ajith Kumar Racing) என்ற அணியுடைய கார் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – OTT Spot | ஃபீல்குட் + த்ரில்லர்..டாப் IMDb ரேட்டிங்.. பொங்கல் விடுமுறையில் கண்டுகளிக்க 5 ஓடிடி படங்கள்!

அஜித்தை ஆரத் தழுவி அவருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை மாதவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது. ‘உங்களை நினைத்து மிக மிக பெருமைப்படுகிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர் நீங்கள்!! நீங்கள் ஒருவர் தான் அஜித் குமார்’ என்று மகிழ்ச்சியுடன் மாதவன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக சிரிப்பதை இப்போதுதான் பார்க்கிறோம் என சில ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.





Source link