Last Updated:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

News18

நடிகர் அஜித்குமார் கார் பந்தயங்கள் முடியும் வரை சினிமாவில் நடிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதேசமயம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் அது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் பார்முலா கார் பந்தயங்களிலும் கலந்து கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் Actor Cum Racer என்ற பெருமை அவரிடம் உள்ளது.  ரேசர் அஜித்குமார் கிரிக்கெட்டில், ஐ.பி.எல் அணி போல கார் ரேஸ் பந்தயத்தில் ஒரு அணியை வாங்கியுள்ளார். துபாயில் நடக்கும் 24 மணி நேர ரேஸ் பந்தைய போட்டியில் அவரும், அவருடைய அணியினரும் கலந்து கொள்கின்றனர். அதற்கான போட்டி ஜனவரி 11 மற்றும் 12 (இன்று மற்றும் நாளை) ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. அதாவது இன்று தொடங்கி நாளை முடியும். (24 மணி நேர ரேஸ் பந்தயமாக அந்தப் பந்தயம் நடக்க உள்ளது)

அந்தப் பந்தயத்தில் 42 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஒவ்வொரு அணியினரும் 24 மணி நேரம் கார் ரேஸ் ஓட்ட வேண்டும். ஒரு அணியில் குறைந்தது மூன்று பேரும் அதிகபட்சம் ஐந்து பேரும் இருக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு வீரர் 2 மணி நேரம் வாகனத்தை இயக்க வேண்டும். அதேபோல் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதில் அதிக கிலோ மீட்டர் ஓட்டும் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த பந்தயத்தில் அஜித் மிகுந்த ஆர்வத்துடன் அணியை வாங்கி பங்கேற்று உள்ளார்.

கார் ரேஸ் பந்தயங்களில் தொடர்ந்து கலந்து கொள்ள இருப்பதால், சினிமாவில் இருந்து அக்டோபர் மாதம் வரை அஜித் இடைவெளி எடுக்கிறார் என்ற தகவல் ஏற்கன நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதை உறுதி செய்யும் விதமாக துபாய் 24H சீரியஸ் கார் பந்தயத்திற்கு குறித்த நேர்காணலில், கார் ரேஸ் பந்தயத்திற்காக சினிமாவில் இருந்து சின்ன இடைவெளி எடுப்பதாக அஜித் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். அஜித்குமார் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ள சினிமாவில் இடைவெளி எடுத்தாலும், அவர் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. எனவே தன்னுடைய பணிகளை கொடுத்த பிறகுதான் கார் ரேஸ் பந்தயத்திற்கு சென்று இருக்கிறார் அஜித்.

அஜித்குமார் சுமார் 10 மாதங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், அந்த இடைவேளையில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அட்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்தாலும், அது அவருடைய ரசிகர்களை எந்த ஒரு விதத்திலும் சோர்வை ஏற்படுத்தாது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டிய கதை மற்றும் இயக்குனரையும் அவர் தேர்ந்தெடுத்து விட்டார். ரேஸ் பந்தயம் முடியும் தருவாயில் அந்த படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். எனவே இந்த ஆண்டு அஜித்தின் இரண்டு படங்கள் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் என அஜித் ரசிகர்களுக்கு Double Treat காத்துகொண்டிருக்கிறது.



Source link