Last Updated:
அஜித் பங்கேற்றதை தொடர்ந்து அரங்கம் நிரம்பியதுடன், சமூக வலைதளங்களிலும் கார் ரேஸ் குறித்த பதிவுகள் ட்ரெண்டாகின. அஜித்தின் அணி வெற்றி பெற்றதற்கு தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு திரை துறையில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
நேர்காணல் ஒன்றில் ரசிகர்களிடம் அஜித் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்து விட்டு துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றார். இதற்காக கடந்த சில நாட்களாக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அஜித்குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அவர் பாதுகாப்பு நலன் கருதி துபாய் 24 மணி நேர கார் பந்தய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கார் ரேஸின்போது அஜித் குமாரின் அணி 3 ஆவது இடத்தை பிடித்தது. தனக்கு பேரார்வம் கொண்ட துறையில் அஜித் குமார் முக்கிய சாதனையை நிகழ்தியதை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். கையில் தேசியக் கொடியுடன் ரேஸ் சர்க்யூட்டில் அவர் துள்ளிக் குதித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
வெற்றியை தொடர்ந்து அவருக்கு மேடையில் வைத்து பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா, தமிழ்நாடு மற்றும் தமிழ் சினிமாவின் புகழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றார் அஜித். முன்பெல்லாம் இந்த கார் ரேஸ் நடைபெறும்போது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது.
இதையும் படிங்க – பெயரை மாற்றிய நடிகர் ‘ஜெயம் ரவி’ – திடீர் முடிவால் கோலிவுட்டில் பரபரப்பு
ஆனால் அஜித் பங்கேற்றதை தொடர்ந்து அரங்கம் நிரம்பியதுடன், சமூக வலைதளங்களிலும் கார் ரேஸ் குறித்த பதிவுகள் ட்ரெண்டாகின. அஜித்தின் அணி வெற்றி பெற்றதற்கு தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு திரை துறையில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
Ketaare oru kelvi 🤐🥲❤️#AjithKumar pic.twitter.com/ZqnzzdjsrP
— Trollywood ???? (@TrollywoodX) January 13, 2025
இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அஜித், அஜித் வாழ்க.. விஜய் வாழ்க சரி; நீங்க எப்போ வாழப்போறீங்க? என்று கேள்வி எழுப்பினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
January 13, 2025 11:11 PM IST