அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தியடையச் செய்யும் அரசியல் தந்திரமாக எதிர்க்கட்சிகள், அரிசி, தேங்காய் இல்லையென குற்றம் சுமத்துவதாகவும் இதனை மக்கள் நம்பிவிடக்கூடாதெனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, இதனை தெரிவித்த அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், தீவிரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு மழை மற்றும் வெள்ளத்தால் தடைபட்டமை வருத்தமளிக்கின்றது.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தியடையச் செய்யும் நோக்கில், அரசியல் தந்திரமாக தேங்காய் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.இதேவேளை, ஆடம்பர வாகனங்களை செலுத்துவதற்கு அல்லது கதவுகளைத் திறப்பதற்கு வேலையாட்கள் வேண்டுமென்ற தேவையோ விருப்பமோ எமக்கில்லை. தன் வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை.
புதிய அரசாங்கத்தின் கீழ், யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது. உரிய கடமைகளுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும். அந்த வாகனங்கள் ஐந்து வருட முடிவில் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
The post அடுத்த தேர்தலை இலக்கு வைத்து எதிர்தரப்பு போலி பிரசாரம் appeared first on Thinakaran.