நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் OTT-யில்  பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு, நடிகர் சூரியா நடித்திருந்த கங்குவா படம் கடந்த 14ஆம் தேதி வெளிவந்தது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பத்தானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முன்பு நடித்த படங்கள் போல் இல்லாமல் கங்குவா படம் சூர்யாவுக்கு ஒரு வரலாற்று படமாக அமைந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பை பெறவில்லை. படத்தை பற்றியும், அதில் உள்ள சத்தம் பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் வசூலும் சரிவை சந்தித்ததாக்க கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க:
மீண்டும் தனுஷை தாக்கி பேசினாரா நயன்தாரா..? சர்ச்சையாகும் பதிவு..!

இந்த நிலையில் கங்குவா படம் OTT-க்கு எத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா படத்தை அமேசான் ப்ரைம் தளம் ரூ. 100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக அளவு வைட்டமின் டி கொண்ட 5 சூப்பர்ஃபுட்கள்.!


அதிக அளவு வைட்டமின் டி கொண்ட 5 சூப்பர்ஃபுட்கள்.!

நடிகர் சூர்யா பெயர் வைக்கப்படாத கார்த்திக் சுப்பராஜ் படத்தை தொடர்ந்து,  தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்கிறார்.

.



Source link