ரூ.17,999 விலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நத்திங் இயர் ஓபன் புதிய இயர்பட்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

* நத்திங் நிறுவனம் தனது புதிய நத்திங் இயர் ஓபன் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது

* நத்திங் இயர் ஓபன் விலை ரூ.17,999

* இந்த புதிய TWS இயர்பட்கள் திறந்த காது வடிவமைப்புடன் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது

நத்திங் தனது புதிய நத்திங் இயர் ஓபன் என்கிற ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.17,999 விலையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இயர்பட்கள், முதல்முறையாக ஓப்பன்-இயர் வடிவமைப்புடன் தனித்துவமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய நத்திங் இயர் மற்றும் இயர் (1) இன் வழக்கமான இன்-இயர் ஸ்டைலில் இருந்து இது முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.

விளம்பரம்
கண்பார்வையை மேம்படுத்தும் 7 உலர் பழங்கள்!


கண்பார்வையை மேம்படுத்தும் 7 உலர் பழங்கள்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் ஓபன் அதன் மற்ற ஆடியோ தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான தோற்றத்துடன் இருப்பதுடன், நிறுவனத்தின் வெளிப்படையான முத்திரையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில், நத்திங் இயர் ஓபன் இயர்பட்ஸ் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும், மேலும் வேறு வண்ணங்களில் இந்த இயர்பட்ஸை நத்திங் நிறுவனம் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது. இந்த இயர்பட்களுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் நத்திங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. மற்ற சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வாங்க முடியுமா என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. உலகளாவிய சந்தைகளில் இந்த இயர்பட்ஸ் உடனடியாகக் கிடைக்கும் என்பதால், நிறுவனம் இந்தத் தயாரிப்பை சற்று தாமதமாகக் கிடைக்கச் செய்யலாம் என்று தெரிகிறது.

விளம்பரம்

நத்திங் இயர் ஓபன் – சிறப்பம்சங்கள்:

நத்திங் இயர் ஓப்பனில் ஆக்டிவ் இயர் கேன்சலேஷன் (ANC) இல்லாவிட்டாலும், இது ஒரு சவுண்ட் சீல் சிஸ்டம் மற்றும் டைரக்ஷனல் ஸ்பீக்கர்களுடன் அதனை ஈடுசெய்கிறது, இது ஒரு யூசர் மட்டுமே இசையைக் கேட்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

இதையும் படியுங்கள் :
சோனி WF-C510 பட்ஜெட் TWS இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்… இதன் விலை எவ்வளவு? – விவரம்!

டைட்டானியம் பூசப்பட்ட பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் டயாபிராம் கொண்ட 14.2 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகிறது, எனவே அதன் புதிய இயர்பட்கள் உயர்தர ஒலியை வழங்குவதாக நத்திங் தெரிவித்துள்ளது. பிஞ்ச் கன்ட்ரோல்கள், கூகுள் ஃபாஸ்ட் ஃபேர், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் ஃபேர், டூயல் கனெக்‌ஷன் மற்றும் சிறந்த அழைப்புகளுக்கான AI தெளிவான குரல் தொழில்நுட்பம் ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

விளம்பரம்

நத்திங் இயர் ஓபன், இயர்பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸ் இரண்டையும் உள்ளடக்கிய நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டுடன் வருகிறது. பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு பஃட்டுக்கும் 64mAh பேட்டரி உள்ளது, அதே நேரத்தில் கேஸ் 635mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்வதால் 8 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்றும், சார்ஜிங் கேஸுடன் 30 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

நத்திங் ஸ்மார்ட்போன் இல்லாத பயனர்கள், நத்திங் எக்ஸ் ஆப்பை, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்து பயன்படுத்துவதன் மூலம், இதன் முழு செயல்பாடு மற்றும் தனிப்பட்ட மாற்றங்களை செய்ய வழி செய்கிறது. AAC மற்றும் SBC போன்ற புளூடூத் கோடெக்குகளுக்கான ஆதரவும் இதில் உள்ளது.

.



Source link