புத்தாண்டை முன்னிட்டு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் “நியூ இயர் வெல்கம் பிளான்” என்கிற சலுகையுடன் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.2025 பிளானில், அன்லிமிடெட் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என 200 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர திட்டங்களை வெளியிட்டுள்ளது. இது நீண்ட கால வேலிடிட்டியில், அதிகளவு டேட்டாவை எதிர்பார்க்கும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிளான், அடிக்கடி ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைக் குறைப்பதோடு, நீண்ட கால தீர்வைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகவும் அமைகிறது. மேலும், இந்த புதிய நியூ இயர் வெல்கம் பிளானை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு, கூடுதலாக ரூ. 2150 மதிப்புள்ள பார்ட்னர் கூப்பன்களும் கிடைக்கும், இந்த கூப்பனை பயன்படுத்தி யூசர்கள், ஷாப்பிங் மற்றும் பயணத்திற்கான தள்ளுபடிகளை பெறலாம்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா போன்ற முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், ஜியோவின் இந்த சமீபத்திய பிளான் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜியோவின் முக்கிய வருடாந்தர பிளான்கள்:

1. ரூ. 3,999 பிளான்:

வேலிடிட்டி காலம்: 365 நாட்கள்

டேட்டா: ஒரு நாளைக்கு 2.5ஜிபி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா

அழைப்புகள்: அன்லிமிடெட்

எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

கூடுதல் நன்மைகள்: ஜியோ டிவி (JioTV), ஜியோ க்ளவுடு (JioCloud) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) (ஸ்டாண்டர்டு வெர்ஷன்) ஆகியவற்றை பெற அனுமதிக்கிறது. மேலும், சந்தாதாரர்கள் ஜியோ டிவி மொபைல் ஆப் மூலம் ஃபேன்கோடு (FanCode) சப்ஸ்கிரிப்ஷனையும் பெறுவார்கள்.

2. ரூ 3,599 பிளான்:

வேலிடிட்டி காலம்: 365 நாட்கள்

டேட்டா: ஒரு நாளைக்கு 2.5ஜிபி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா

அழைப்புகள்: அன்லிமிடெட்

எஸ்எம்எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

கூடுதல் நன்மைகள்: ஜியோ டிவி (JioTV), ஜியோ க்ளவுடு (JioCloud) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) (ஸ்டாண்டர்டு வெர்ஷன்) ஆகியவற்றை பெற அனுமதிக்கிறது. ஆனால், இந்த பிளானுக்கு ஃபேன்கோடு (FanCode) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்காது.



Source link