வங்கதேச அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை டி20 தொடரை இந்தியா வென்ற பிறகு விளையாடும் முதல் டி20 தொடர் என்பதால் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, பும்ரா, கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
ஏலம் முதல் சம்பளம் வரை! 2025 – 2027 ஆம் ஆண்டிற்கான IPL விதிகள் என்ன?
ஐபிஎல் போட்டிகளில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி கவனம் ஈர்த்த லக்னோ அணியின் மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அபிஷேக் சர்மா, ஹர்த்திக் பாண்டியா, ரிங்கு சிங், ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் தமிழக வீரரும், கொல்கத்தா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான வருண் சக்கரவர்த்தி. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் 6-ஆம் தேதி மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியர் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (வி.கீ), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்
.