நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்றிரவு (20) நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றதுடன், நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் சரித் அசலங்க;
“வீரர்கள் நல்ல மனநிலையில் உள்ளனர். T-10 போட்டியில் விளையாடிய பிறகு, அவர்கள் ஓட்டங்களுக்கும் விக்கெட்டுகளுக்கும் இடையில் சிறப்பாகச் செயல்பட்டனர். இது அணிக்கு ஒரு நல்ல தயாரிப்பு.
சவாலான போட்டி. தங்கள் நாட்டில் நியூசிலாந்து மிகவும் வலுவாக உள்ளது. அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்களின் அனுபவத்தை புதுமுகங்களுக்கு புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
நியூசிலாந்தில் விளையாடும் போது, மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக துனித் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது மிகவும் கடினமான முடிவு. இது எனக்கும், தேர்வுக் குழுவுக்கும், பயிற்சியாளருக்கும் கடினமான முடிவு. நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் விளையாடும்போது சில சமயங்களில் இந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்..”
இரு நாடுகளுக்கு இடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் முதலில் நடைபெறவுள்ளது.
போட்டிகள் இம்மாதம் 28,30 மற்றும் 2025 ஜனவரி 2 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.
The post அணியில் இருந்து துனித் வெல்லாலகே நீக்கப்பட்டது எதற்கு? appeared first on Daily Ceylon.