ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளன. உக்ரைன் அந்த ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், ரஷ்யாவின் அணு ஆயுத பயன்பாட்டு கொள்கையில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, எந்தவொரு அணு ஆயுதம் இல்லாத நாடும், அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யா மீது நடத்தப்படும் தாக்குதலை அவர்களின் கூட்டு தாக்குதலாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும்… எலன் மஸ்க் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி!

ரஷ்யா மீது ஏவுகணைகள், விமானங்கள் அல்லது ட்ரோன்களின் ஏவுதலைக் கண்டறிந்தால், அணு ஆயுத தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவது பற்றி பரிசீலிப்போம் என்றும் புதின் கூறியுள்ளார்.

.



Source link