இந்த நீண்ட தூர ஏவுகணை அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என உக்ரைன் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் ரஷ்யாவிடம் இருந்து அணு ஆயுத தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் தற்போதைய கொந்தளிப்பின் மீது பதிந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? இது நடந்தால், உலகில் எந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்?
நமது அண்டை நாடான பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவும் அணுசக்தி கொண்ட நாடுதான். அப்போது இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான சீனாவும் யாருக்கும் குறைந்ததல்ல.
அதாவது, போர் ஏற்பட்டால், நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். இந்த பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும். உலகப் போர் நடந்தால் இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் அழிந்துவிடுவார்கள். எப்படியிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பானின் இரண்டு நகரங்களில் அணுகுண்டுகளை வீசிய பயங்கரத்தை மறப்பது கடினம்.
எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, அணுசக்தி யுத்தமானது கதிர்வீச்சு, வெப்பம் மற்றும் வெடிப்பு போன்றவற்றின் விளைவுகளால் மரணத்தை உண்டாக்கும். உணவு விநியோகத்தை முற்றிலும் சீர்குலைக்கும். வளிமண்டலம், கடல்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள 6.7 பில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படலாம்.
இந்த ஆய்வில், அணுசக்தி போருக்குப் பிறகு வளிமண்டலம் மற்றும் விவசாய விளைவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் பாரிய பட்டினியை தவிர்க்கக்கூடிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, ஓமன் ஆகிய நாடுகளின் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. போருக்குப் பின்னரும் இந்த நாடுகளில் தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் பெரும்பகுதி கடுமையான பஞ்சத்தை சந்திக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் பட்டினியால் இறக்கலாம்.
இதையும் படிங்க – இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்; ஆனாலும் இவர்களுடன் போர் நீடிக்கும்!
உதாரணமாக, அமெரிக்காவில் 98 சதவிகித மக்கள் (சுமார் 300 மில்லியன் மக்கள்) அணுசக்தி யுத்தத்திற்குப் பிறகு பட்டினியால் இறக்கலாம். முழுமையான பட்டினியை எதிர்கொள்ளாத சில பகுதிகள் உள்ளன, ஆனால் அவற்றின் கலோரி நுகர்வு கடுமையாக குறைக்கப்படும். இந்த பகுதிகளில் உள்ளவர்கள் உடல் எடையை குறைத்து, அவர்களின் செயல்பாடுகள் அலட்சியமாகிவிடும். ஏனென்றால், அவர்களுக்குச் சாப்பிட போதுமான உணவு இருக்காது.
November 27, 2024 8:29 PM IST
அணு ஆயுத போர் ஏற்பட்டால் உலகில் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்? வியப்பூட்டும் தகவல்