Last Updated:
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா ஆகிய திரைப்படங்கள் இயற்றிய நெல்சன் வெங்கடேசன் தற்போது அதர்வா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்
அதர்வா நடித்துள்ள DNA திரைப்படத்தின் டீசர் நாளை மதியம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இந்த டீசரை தனுஷ் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா ஆகிய திரைப்படங்கள் இயற்றிய நெல்சன் வெங்கடேசன் தற்போது அதர்வா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டி.என்.ஏ என தலைப்பு வைத்திருக்கின்றனர்.
இதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது படத்தின் டீசரை நாளை மதியம் 12 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அதர்வா நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் வரவேற்பை பெறாத நிலையில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
#DNAMovie Teaser will be released by the most versatile & favourite star @dhanushkraja 😎💥
January 10th, at 12:05 ⏳
Starring @Atharvaamurali & #NimishaSajayan
Written & directed by @nelsonvenkat
Produced by @Olympiamovis @Ambethkumarmla pic.twitter.com/8ClrDATcCx
— Olympia Movies (@Olympiamovis) January 9, 2025
இந்தப் படத்தில் மலையாள நடிகை நிமிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டி.என்.ஏ. படத்தை ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
January 09, 2025 4:13 PM IST