ஆன்லைனில் அதிகரித்து வரும் மோசடிகளில் இருந்து, பாதுகாப்பாக இருக்க அமெரிக்காவைச் சேர்ந்த பேமெண்ட் கார்டு சேவை நிறுவனமான விசா, பாதுகாப்புக்கான 10 உதவிக் குறிப்புகளை வழங்கியுள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு நன்மையை தருகிறதோ, அந்த அளவுக்கு தீங்கையும் விளைவிக்கிறது. இதனை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பல்வேறு வகையான புதுப்புது மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் பாதுகாப்புக்கான எச்சரிக்கைகளை அதிகரித்து வந்தாலும், மக்கள் மோசடி கும்பலிடம் தொடர்ந்து மாட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
குறிப்பாக, விழாக்காலங்கள், விடுமுறை நாட்களில் அதிகளவில் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற 10 முக்கிய உதவிக் குறிப்புகளை விசா நிறுவனம் வழங்கியுள்ளது.
விசா வெளியிட்டுள்ள 2024 விடுமுறை அச்சுறுத்தல் அறிக்கை, விடுமுறை ஷாப்பிங் மோசடிகளின் அதிகரிப்பை குறிப்பிட்டுக் காட்டுகிறது. வாடிக்கையாளர்களை பாதுகாக்க, இணையதளங்களின் பாதுகாப்பை சரிபார்த்தல், ஒப்பந்தங்களை சரிபார்த்தல், பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துதல், சுய விவரங்களை திருடும் மின்னஞ்சல்கள், டிவைஸ் அப்டேட்கள், வலுவான கடவுச்சொற்கள் மற்றும் டூ ஃபேக்டர் ஆத்தன்டிகேஷன் (2FA) ஆகியவற்றைப் பயன்படுத்துதல், கணக்குகளைக் கண்காணித்தல், தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்தல், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மற்றும் பொது வைஃபையை தவிர்ப்பது போன்றவற்றை நடைறைகளை பின்பற்ற விசா அறிவுறுத்துகிறது.
விசாவின் 2024 விடுமுறை அச்சுறுத்தல் அறிக்கை, கடைக்காரர்களை குறிவைத்து நடக்கும் மோசடிகள் மற்றும் மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பற்றி எச்சரிக்கிறது. இ-காமர்ஸ் மற்றும் தனிநபர் ஷாப்பிங் செயல்பாடுகள் இந்த நேரத்தில் அதிகரித்து வருவதால், சந்தேகத்திற்கு இடமில்லாத நுகர்வோரிடமிருந்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்களின் தகவல் மற்றும் பணத்தை திருட சைபர் குற்றவாளிகள் அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஷாப்பிங் செய்பவர்கள் ஒரு படி முன்னேறி இருக்க, அமெரிக்க பேமெண்ட் கார்டு சேவை நிறுவனமான விசா, பாதுகாப்பான விடுமுறை ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்வதற்கான உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க:
வைஃபை பிளானில் ஏர்டெல் கொண்டுவந்த புதிய அப்டேட்… இலவச ஜி5 ஓடிடி-யும் இணைப்பு
விசா கூறும் 10 பாதுகாப்பு அம்சங்கள்
1. நம்பகமான மற்றும் பாதுகாப்பான இணையதளமா என்பதை சோதிக்கவும்
URLஇல் “https” மற்றும் சர்ச் பாரில் பேட்லாக் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட, இணையதளம் பாதுகாப்பானது மற்றும் உங்கள் தரவைப் பாதுகாக்க என்க்ரிப்ஷனைக் கொண்டுள்ளது என்பதை இந்தக் குறியீடுகள் காட்டுகின்றன.
2. நம்பமுடியாத ஒப்பந்தங்களில் ஜாக்கிரதை
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பமுடியாத ஒப்பந்தங்களுடன்தான் மக்களை ஈர்க்கிறார்கள். எனவே, அது உண்மையானதுதான் என்பதில் நீங்கள் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுங்கள். இல்லையெனில் பின்வாங்குவதே நல்லது.
3. பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்தவும்
கார்டுகள் மற்ற பேமெண்ட் முறைகளை விட மோசடியில் இருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. நேரடி பணப் பரிமாற்றங்கள், வயர் பரிமாற்றங்கள் மற்றும் பியர்-டு-பியர் மொபைல் பயன்பாடுகளில் பங்குகொள்வதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஏனெனில், அவை மோசடி செய்பவர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இதையும் படிக்க:
வாட்ஸ்அப்பில் இந்த மாற்றங்கள் தெரிகின்றதா…? உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது கன்ஃபார்ம்…!
4. மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளில் எச்சரிக்கை
விடுமுறை நாட்களில், மக்களின் சுய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவது போன்ற மோசடிகள் இயல்பாக நடக்கின்றன. எனவே, கோரப்படாத மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளில் பகிரப்படும் தொடர்புகளை கிளிக் செய்ய வேண்டாம். எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் வழங்குவதற்கு முன் எப்போதும் அனுப்புநருடன் நேரடியாக அவர்களின் வாடிக்கையாளர் சேவை எண் அல்லது மொபைல் பயன்பாடு மூலம் சரிபார்க்கவும்.
5. டிவைஸ் அப்டேட்
வழக்கமான புதுப்பிப்புகளில் பெரும்பாலும் புதிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, உங்கள் சாதனங்களும், மென்பொருளும் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும்.
6. வலுவான கடவுச்சொற்கள் மற்றும் 2FA அவசியம்
உங்கள் ஆன்லைன் கணக்குகள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கடவுச்சொல்லைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மோசடி செய்பவர்கள் அணுகுவதற்கு மிகவும் சவாலானதாக இருக்க, டூ ஃபேக்டர் ஆத்தன்டிகேஷனுடன் (2FA) இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. வங்கி மற்றும் கிரெடிட் கார்டு அறிக்கை கண்காணிப்பு
ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்காக உங்கள் அறிக்கைகளை தவறாமல் சரிபார்ப்பது நல்லது, பரிவர்த்தனைகளுக்கான அலர்ட்டை பயன்படுத்துங்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும்.
இதையும் படிக்க:
M7 Pro மற்றும் C75… இந்தியாவில் புதிதாக இரண்டு 5ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தி இருக்கும் போகோ…!
8. போலியான தொண்டு நிறுவனங்கள் – எச்சரிக்கை தேவை
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் விடுமுறை காலத்தை பயன்படுத்தி, போலியான தொண்டு நிறுவனங்களை அமைக்கின்றனர். நன்கொடை வழங்குவதற்கு முன் எப்போதும் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆராயுங்கள். உங்கள் நல்லெண்ணம், ஒரு நல்ல காரியத்திற்குச் செல்வதை உறுதிசெய்ய உதவ, சேரிட்டி நேவிகேட்டர் (Charity Navigator) போன்வற்றில் சோதனை செய்து பாருங்கள்.
9. தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு
அவசியமின்றி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். மோசடி செய்பவர்கள், குரல்களை மாற்றுவதில் ஆரம்பித்து தற்போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுவித மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே தனிப்பட்ட தகவலுக்கான கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர் மூலம் வந்தாலும் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
10. பப்ளிக் வைஃபையில் ஷாப்பிங்
பொது வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றவை மற்றும் ஹேக்கர்கள் அவற்றை எளிதாக அணுகுகிறார்கள். எனவே, பாதுகாப்பான வீட்டு நெட்வொர்க்கிலிருந்து ஷாப்பிங் செய்வது அல்லது விபிஎன் (VPN)ஐப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
.