Last Updated:

Cryptocurrency | பிட்காயினை தொடர்ந்து மற்ற கிரிப்டோ கரன்சிகளாக டாஜ் காயின் ((Dogecoin)) மற்றும் Ether ஆகிய கரன்சிகளும் சரிவை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News18

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு 11 லட்ச ரூபாய் வரை சரிவை சந்தித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார்.

அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பங்கு சந்தை, கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு முதலீடு சார்ந்த துறைகள் ஏற்றம் கண்டன.

இந்நிலையில், திடீரென பிட்காயின் மதிப்பு 7 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை மாற்றத்தின் காரணமாக பிட்காயின் மதிப்பு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சட்டவிரோதமாக கடன் வழங்குவோருக்கு 10 ஆண்டுகள் சிறை… சட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு

இந்திய மதிப்பில் 80 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வரை வர்த்தகமாகி வந்த பிட்காயின், ஏறத்தாழ 11 லட்ச ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்காயினை தொடர்ந்து மற்ற கிரிப்டோ கரன்சிகளாக டாஜ் காயின் (Dogecoin) மற்றும் ஈதர் (Ether) ஆகிய கரன்சிகளும் சரிவை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Bitcoin | அதிரடியாக சரிந்த பிட்காயின் மதிப்பு… அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள் – திடீர் சரிவுக்கு என்ன காரணம்?



Source link