இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கவனயீனமாகவும் சாரதி களைப்புடனும் வாகனம் செலுத்துகின்றமை இந்த விபத்துக்கள் இடம்பெற பிரதான காரணங்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம். குறிப்பாக சாதாரண வீதிகளில் பயணிப்பதை விட நாம் அதிவேக நெடுஞ்சாலையில் அதிக வேகத்துடன் பயணிக்கிறோம். இதன்போது விபத்து ஏற்பட்டால் அது பாரதூரமான விபத்தாக மாறலாம். அதேபோன்று உயிர் ஆபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எமது அவசரம் பேராபத்தை விளைவிக்கும்.

எனவே, சாரதிகள் அதி வேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Source link