சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட்டில் குறைவான இலக்கை நிர்ணயித்து 2004 ஆண்டு வெற்றி பெற்றது இந்திய அணி. இறுதிநாளான இன்று நியூசிலாந்து அணிக்கு அதே வரலாற்றை மீண்டும் படைக்குமா இந்தியா?

பெங்களூருவில் நடைபெற்று வரும், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து 402 ரன்கள் சேர்த்தது. 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோகித், கோலி, சர்ஃபராஸ் கான் அரைசதம் அடித்தனர். 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃபராஸ் கானுடன் இணைந்து, ரிஷப் பந்த் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். இருவரும் அதிரடியாக ரன்மழை பொழிந்து, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்த சர்ஃபராஸ் கான், 150 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பந்த், 99 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

விளம்பரம்

ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 54 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது. 462 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் போட்டியைத் தொடரும்படி நடுவரிடம் முறையிட்டனர். எனினும் சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

விளம்பரம்

கடைசி நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளதால், போட்டி டிராவில் முடியுமா? அல்லது நியூசிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Also Read |
BCCI | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி… பாகிஸ்தானின் புதிய பரிந்துரை… பரிசீலிக்குமா இந்தியா?

2004 வரலாறு திரும்புமா?: சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட்டில் குறைவான இலக்கை நிர்ணயித்து 2004ம் ஆண்டு வெற்றி பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்த இந்திய அணி, 13 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் கடைசி இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவுக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 31 ஓவர்களில் வெறும் 93 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஹைடன் 24 ரன்கள் எடுத்தார்.

விளம்பரம்

இந்தியாவைப் பொறுத்தவரை, ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 9 விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்பஜன் சிங் மட்டும் ஐந்து விக்கெட்டுகள் அந்தப் போட்டியில் வீழ்த்தியிருப்பார்.

விளம்பரம்

தற்போதும் அதே இலக்கு தான் என்பதால் 2004 வரலாற்றை ரோஹித் அன்ட் கோ மீண்டும் படைக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப, இறுதிநாள் ஆட்டத்தை ஃபயர் மோடில் ஆரம்பித்துள்ளது இந்திய அணி.

பும்ரா தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை பூஜ்யத்தில் வெளியேற்றியுள்ளார். இதனால் பெங்களூரு டெஸ்ட் போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

விளம்பரம்

.





Source link