அநுராதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோர் தலைமையில், பிரதான அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் (27) நடைபெற்றது.

மேற்படி மாவட்டத்தில் 1962 குடும்பங்களைச் சேர்ந்த 6198 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கேர்னல் சனத் திஸாநாயக்க தெரிவித்தார். இதுதவிர 590 பேர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தின் போது முப்படையினருடன் பிரதேச செயலக மட்டத்தில் தேவையான தகவல்களை பெற்று தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவிக்கையில்:- இந்த அனர்த்த நிலைமையின் போது ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள், முப்படையினர் மற்றும் சிவில் சமூகத்தினரும் இந்த நிலையை போக்க நிவாரணப் பணிகளை மேற்கொண்டமை தொடர்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மாகாண பிரதான செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post அநுராதபுரம் மாவட்டத்தில் 1962 குடும்பங்கள் இடம்பெயர்வு appeared first on Thinakaran.



Source link