Last Updated:
சமீப காலமாக வெளியான அதிக வன்முறை நிறைந்த படங்களில் இந்த மார்கோ திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் தான் அதிக வன்முறை காட்சி நிறைந்ததாக விமர்சனங்கள் இருந்தன.
அனிமல் படத்தை மிஞ்சும் அளவுக்கு வன்முறை காட்சிகள் நிறைந்ததாக, சமீபத்தில் வெளியாகி உள்ள மலையாள திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்து சில ஆண்டுகளாக ஆக்சன் திரில்லர் படங்களை சினிமா ரசிகர்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். அனிமல், சலார் உள்ளிட்ட வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளன. அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து அதே ஜேனரில் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் மலையாளத்தில் மார்கோ என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் உன்னி முகுந்தன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் சித்திக், ஜெகதீஷ், அபிமன்யு, கபீர் துகான் சிங், அன்சூர் பால் மற்றும் யுக்தி தரேஜா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
சமீப காலமாக வெளியான அதிக வன்முறை நிறைந்த படங்களில் இந்த மார்கோ திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் தான் அதிக வன்முறை காட்சி நிறைந்ததாக விமர்சனங்கள் இருந்தன. இந்த படத்துடைய க்ளைமேக்ஸ் ரத்தக் களறியாக காட்சியளித்த நிலையில், இந்த படத்தை மிஞ்சும் அளவுக்கு மார்கோ படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த படத்தில் வில்லனாக கபீர் துகான் சிங் நடித்திருக்கிறார். சைரஸ் ஐசக் என்ற கேரக்டரில் நடித்துள்ள அவர் தனது கெரியரில் இந்த திரைப்படம் முக்கியமான ஒன்று என தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான சவாலான அதே நேரம் வலுவான கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க – Kanguva | ஆஸ்கர் விருது பட்டியலில் ‘கங்குவா’ – சாத்தியமானது எப்படி?
கர்ப்பிணி பெண்ணை கொலை செய்யும் காட்சியில் நடித்தது தனக்கு மிகுந்த பதட்டத்தை கொடுத்ததாகவும், அந்த காட்சியிலிருந்து வெளியே வர தனக்கு தியானம் உதவி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மார்கோ திரைப்படம் வெளியான 15 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து வருகிறது. இது சமீப காலமாக எந்த ஒரு மலையாள திரைப்படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு என்பது கவனிக்கத்தக்கது.
January 07, 2025 4:07 PM IST