இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது தயாரிப்பாளர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட பாடலை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனுஷின் இந்த செயலுக்கு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “உங்களைப்போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக பகிரங்க புகார் கூறினார். இதனிடையே, தனுஷ் மீதான நயன்தாராவின் குற்றச்சாட்டிற்கு, பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாராவின் பதிவுக்கு தனுஷூடன் ‘‘மரியான்’’ படத்தில் நடித்த பார்வதி லைக் செய்துள்ளார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், “எல்ஐசி பட தலைப்பை அனுமதியின்றி விக்னேஷ் சிவன் பயன்படுத்துகிறார். தலைப்பை வழங்க முடியாது என கூறியபோது அதிகாரத்தன்மையுடன் அதே தலைப்பை வைத்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
.